வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் தங்களது பணத்தை நாட்டிற்கு அனுப்பிவைக்கும் போது சட்டபூர்வமான வழிமுறைகளை மாத்திரம் பின்பற்றுமாறு இலங்கை மத்திய வங்கியின் கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தலைமையில் இன்று இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்ட விரோதமான முறைகளை பயன்படுத்தி நாட்டிற்கு பணம் அனுப்புவோருடைய கணக்குகள் உடனடியாக முடக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சரியான காரணங்கள் முன்வைக்கப்படாமல் பாரியளவிலான பண வைப்புகளை செய்துள்ள கணக்குகள் தொடர்பான விபரங்கள் பல திரட்டப்பட்டுள்ளதாகவும் ஆளுனர் மேலும் தெரிவித்துள்ளார்.
பணமோசடிக் குற்றச்சாட்டின் கீழ் இவ்வாறான கணக்குகள் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.