நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையம் முழுமையாக வழமையான முறையில் இயங்கும் வரை எதிர்வரும் நான்கு நாட்களுக்கு தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதிக்குள் ஒரு மணிநேர மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாரிய மின்தடையின் பின்னர் அனைத்து மின்சார துணைமின் நிலையங்களும் சீர்திருத்தப்பட்ட நிலையில் நுரைச்சோலை மின் நிலையம் மாத்திரம் சீர்த்திருத்தப்பட வேண்டியுள்ளது.
இலங்கையின் மின்சார சபையின் கூற்றுக்கிணங்க நுரைச்சோலை மின்நிலையம் 300MW மின்னுற்பத்தியை மேற்கொண்டிருந்த நிலையில் மீதமிருக்கும் 600 MW மின்னுற்பத்தியை மேற்கொள்ள மேலும் 2 தொடக்கம் 3 நாட்கள் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.