பல சேவைகள் அத்தியாவசிய சேவை – வர்த்தமானி வெளியீடு

0
1

ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் கூடிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு தடை அல்லது இடையூறு ஏற்படக்கூடும் என கருதி இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி,

* மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளும்,

* பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் வழங்கல் அல்லது விநியோகம்

* மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற பொது நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, உணவு மற்றும் சிகிச்சை தொடர்பாக தேவைப்படும் அல்லது தேவைப்படும் அனைத்து சேவைகள் ஆகியவை அத்தகைய அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்படுகின்றன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அக்டோபர் மாதம் 17 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here