காஸா எல்லை பகுதியிலுள்ள வைத்தியசாலை ஒன்றின் மீது நடாத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் 500ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் மேலும் பல நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.
இந்த தாக்குதலை இஸ்ரேல் நடாத்தியுள்ளதாக ஹமாஸ் அமைப்பு குற்றஞ்சுமத்தியுள்ளது.
எனினும், இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள இஸ்ரேல், பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் என்ற மற்றொரு குழுவால் இந்த தாக்குதல் தவறுதலாக நடாத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளது.
இஸ்ரேலிய இராணுவ எச்சரிக்கைகளுக்குப் பின்னர் சுமார் 600,000 பாலஸ்தீனியர்கள் வடக்கு காஸா பகுதியிலிருந்து தெற்கே வெளியேறியுள்ளனர்.
1,300 இஸ்ரேலியர்களை கொலை செய்த ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காஸாவிற்கான அத்தியாவசிய பொருட்களை இஸ்ரேல் தடை செய்துள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.