கல்முனை முன்னாள் பிரதிமுதல்வர் துருக்கி தூதுவருடன் சந்திப்பு.!!

0
1

கல்முனை மாநகர முன்னாள் பிரதிமுதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளருமான கெளரவ. ரஹ்மத் மன்சூர் அவர்கள், இலங்கைக்கான துருக்கியின் தூதுவர் அதிமேதகு டமெட் ஷெகர்ஜியளு அவர்களை இன்று (ஒக்டோபர் 17) கொழும்பிலுள்ள அவர்களது துருக்கி தூதரகத்தில் சந்தித்தார்.

பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து நாட்டில் நிலவும் சமகாலப் பிரச்சினைகள், விஷேட தேவையுடையவர்கள், குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்கள், வறிய பாடசாலை மாணவர்கள், தாய் தந்தையை இழந்த பிள்ளைகள், கணவனை இழந்த விதவைகளுக்கான வாழ்வாதாரங்கள் மற்றும் பல விடயங்கள் சம்மந்தமாக இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதுடன் இவைகளை நிவர்த்திசெய்யும் பொருட்டு அவைகள் அடங்கிய மகஜர் ஒன்றை கல்முனை முன்னாள் பிரதிமுதல்வர் கௌரவ ரஹ்மத் மன்சூர் அவர்கள் துருக்கி தூதுவரிடம் கையளித்தார்.

தூதுவர் இவைகளை தான் கவனித்திற்கொண்டு துருக்கி மக்கள் சார்பில் தாம் இவற்றுக்கான உதவிகளை விரைவில் செய்வதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் இச்சந்திப்பின் போது இருதரப்பு மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

ASM.ARHAM
JMMC 14th Batch

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here