ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு வர்த்தக பங்காளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்திக்க முடியாது எனவும், எனவே நிறுவனத்தின் 49% பங்குகளை வேறு தரப்பினருக்கு மாற்றி கூட்டு முயற்சியாக நடத்த உத்தேசித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
“நாங்கள் கடனில் இருக்கிறோம். அது 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.”
