“கோல்டன் கேட்” புதிய பாலத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து!!

0
1

ஜப்பானிய அரசின் கடனுதவியுடன் புதிதாக கட்டப்பட்ட கோல்டன் கேட் கல்யாணி (Golden Gate Kalyani) என்ற புதிய பாலத்திற்கு போதைக்கு அடிமையானவர்களால் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பாலத்தில் சுமார் 28 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான செப்பு கம்பிகள் மற்றும் ஆணிகளை போதைக்கு அடிமையானவர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், இரவு நேரங்களில் ரகசியமாக இந்த திருட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

அந்த வகையில், தற்போது 286 மில்லியன் ரூபாய் (28 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் மின்சார வயர்களை கூட அறுத்துள்ளதாகவும் இதன் காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் ஒளிரச்செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை (11) ஜனாதிபதி தலைமையில் கூடிய தேசிய பாதுகாப்பு சபையில் இது தெரியவந்துள்ளது.

நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயதுன்ன மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் இது தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் தேசிய பாதுகாப்பு சபைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

புதிய களனி பாலம் தரையிலிருந்து இணைக்கப்பட்ட செப்பு கேபிள்கள் துண்டிக்கப்படுவதால் ஆபத்தில் உள்ளதாக அவரது தலைமையில் பாராளுமன்றத்தில் கூட்டப்பட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான உப குழுவில் தெரியவந்துள்ளது.

இதன்படி, உடனடியாக பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொறுப்பு வாய்ந்த திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

மேலும், இந்தப் பகுதியை உயர் பாதுகாப்பு வலயமாக மாற்ற பரிந்துரைத்துள்ளார்.

இந்நிலைமையின் அடிப்படையில் புதிய களனி பாலம் மற்றும் கட்டுநாயக்க கொழும்பு அதிவேக வீதியின் பாதுகாப்பை ரக்னா லங்கா நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கா – கொழும்பு நெடுஞ்சாலையில் மின்சார கேபிள்களுக்கு மேலதிகமாக பாதுகாப்பு வலைகள் கூட வெட்டி இரும்புக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here