இலங்கையின் தேசிய மட்ட வீராங்கனைக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை…

கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில் தேசிய சாதனை படைத்த சச்சினி கௌசல்யா பெரேரா மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வீட்டு வேலை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் 9 தடவைகள் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தேசிய சாதனையை நிலைநாட்டி இருந்தார்.

பாதுக்க பிரதேசத்தில் வசிக்கும் இவர், சிறுவயது முதலே விளையாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, 2018 முதல் 2022 வரை தேசிய சாம்பியனானார்.

ஆனால் இந்த திறமைகளை வெளிப்படுத்திய பின்பும், பொருளாதார நெருக்கடி காரணமாக சச்சினி கௌசல்யா பெரேரா தன் தாய்நாட்டை விட்டு வெளியேறி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது.

சச்சினி துபாய் அரச இல்லத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து வருகின்றார்.

தான் எதிர்கொண்டுள்ள இந்த நிலை மற்றுமொரு விளையாட்டு வீரருக்கு ஏற்படக் கூடாது எனவும், அது விளையாட்டு அதிகாரிகளின் பொறுப்பு எனவும் சச்சினி சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here