இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரி கிலோகிராம் ஒன்றிற்கு 100 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக, குறித்த வரி நேற்று (12) முதல் அமுலுக்கு வருவதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
பால் மா மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டாலும் பால் மாவின் விலையில் மாற்றம் ஏற்படாது என பால் மா நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவுக்கு 20% அல்லது 225 ரூபா சுங்க இறக்குமதி வரி விதிக்கப்பட்டு அண்மையில் அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும் நேற்று (12) முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவுக்கான 100 ரூபா வரியை நிதியமைச்சு விதித்துள்ளது.
வரித் திருத்தம் மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும்.
