Home LOCAL ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தும் நேரம் அறிவிப்பு

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தும் நேரம் அறிவிப்பு

0

நாடு பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள இந்த தருணத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாளை (16) நாட்டு மக்கள் மத்தியில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

இதன்படி, நாளை (16) இரவு 8.30க்கு ஜனாதிபதி நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

ஜனாதிபதியின் விசேட உரை, இலத்திரனியல் ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

அதேவேளை, சமூக வலைத்தளங்களிலும் ஜனாதிபதியின் விசேட உரை ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here