இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நாளாந்தம் மின்சார தடை ஏற்படுகின்றமையினால், தனது இலங்கை விஜயத்தை கைவிட்டு, நாட்டை விட்டு வெளியேற எதிர்பார்த்துள்ளதாக யூடியூப் பிரபலமான கேன் எப்ரோட் தெரிவிக்கின்றார்.
தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டே அவர் இதனைக் குறிப்பிடுகின்றார்.
இலங்கையின் சுற்றுலாத்துறை மிக மோசமான நிலைமையை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
இலங்கைக்குள் பல மணித்தியாலம் மின்சார தடை ஏற்படுகின்றமையினால், தான் மாத்திரமன்றி, நாட்டிலுள்ள வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தும் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
உலக நாடுகள் முழுவதும் சென்று, அந்த நாட்டின் முக்கியத்துவத்தை வெளி உலகத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை யூடியூப் பிரபலமான கேன் எப்ரோட் செய்து வருகின்றார்.
இவ்வாறு நாடுகள் குறித்து தனது கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் யூடியூப் பிரபலமான கேன் எப்ரோட், இம்முறை இலங்கை குறித்து எதிர்மறையாக கருத்தையே வெளியிட்டுள்ளார்.
இது இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பாரியதொரு பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.