கண்டி-எசல பெரஹரவில் அதிக தடவைகள் புனித தந்த தாதுவை சுமந்து சென்ற நெதுன்கமுவ ராஜா என்ற யானை 69 வயதில் மரணித்துள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையில், இந்த யானை கண்டி – எசல பெரஹரவில் அதிக தடவைகள் புனித தந்த தாதுவை சுமந்திருந்தது.
குறித்த யானை இன்று அதிகாலை 5.30 அளவில் மரணித்ததாக அதன் பராமரிப்பாளர் வைத்தியர் ஹர்ச தர்மவிஜய தெரிவித்துள்ளார்.
1953ஆம் ஆண்டு இந்தியாவின்-மனிப்பூரில் பிறந்த நெதுன்கமுவ ராஜா, 10 அடி உயரம் கொண்டதென்பது குறிப்பிடத்தக்கது.