கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் அதிவுயர் விலையை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாயின் விலை 116 டொலராக அதிகரித்துள்ளது.
2013ம் ஆண்டு 108.41 டொலராகவும், 2014ம் ஆண்டு 110.23 டொலராகவும் அதிகரித்திருந்த நிலையில், தற்போது அது 116 டொலர் வரை அதிகரித்துள்ளது.
ரஷ்யா மற்றும் யுக்ரேன் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலைக்கு மத்தியிலேயே, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.