தற்காலிகமாக நாடு திரும்ப விரும்பும் பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களை மொஸ்கோவுக்கு பயணிக்குமாறு வெளிவிவகார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
மொஸ்கோவில் உள்ள உள்ள தூதரகம், பெலாரஸில் உள்ள ரஷ்யக் கூட்டமைப்பின் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு, மாணவர்களுக்கு மொஸ்கோ வழியாக பயணம் செய்வதற்கு அவசர அடிப்படையில் விஸாவை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை, மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய 0079 801 445 726 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
அல்லது slemb.moscow@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொண்டும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.