Home LOCAL வனிந்து ஹசரங்க குணமடைந்தார் இந்திய கிரிக்கெட் விஜயத்தில் இணைந்துக்கொள்வாரா?

வனிந்து ஹசரங்க குணமடைந்தார் இந்திய கிரிக்கெட் விஜயத்தில் இணைந்துக்கொள்வாரா?

0
வனிந்து ஹசரங்க குணமடைந்தார் இந்திய கிரிக்கெட் விஜயத்தில் இணைந்துக்கொள்வாரா?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான வனிந்து ஹசரங்க, கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், வனிந்து ஹசரங்கவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, தனிமைப்படுத்தப்பட்டிருந்த வனிந்து ஹசரங்கவிற்கு, மீண்டும் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில், அவருக்கு கொவிட் தொற்று உறுதியாகியதை அடுத்து, அவருக்கு இந்தியாவிற்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தில் இணைந்துக்கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில், வனிந்து ஹசரங்கவிற்கு நேற்று (25) மீண்டும் PCR பரிசோனை நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில், அவருக்கு கொவிட் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்போன் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த வனிந்து ஹசரங்க, இலங்கையை நோக்கி வருகைத் தந்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு இலங்கைக்கு வருகைத்தரும் வனிந்து ஹசரங்க, இந்திய அணியுடனான போட்டியில் கலந்துக்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here