வடகொரியாவின் ஏவுகணைப்பரிசோதனைகள் அமெரிக்காவை மிஞ்சியது எனவும் உலக நாடுகள் குருட்டுத்தனமாக அமெரிக்காவிற்கு பயப்படுகின்றன எனவும் வடகொரியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் உலகில் அமெரிக்காவின் நிலப்பகுதி வரை சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளை ஏவி உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒரே நாடு வடகொரியா எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை வடகொரியாவின் குறித்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் சீனாவின் ஒத்துழைப்பு காணப்படக் கூடும் எனும் சந்தேகம் உலக நாடுகளுக்கிடையில் காணப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.