எரிபொருள் விலையை உயர்த்த அனுமதி கோரும் CPC

0
1

எரிபொருள் விலையை உயர்த்துவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அதன் தலைவர் W.W.D சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

லங்கா IOC நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்த தீர்மானத்திற்கமைய இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி விலையுடன் ஒப்பிடுகையில் ஜனவரி மாதத்தில் டீசல் ஒரு லீட்டரினால் 32.50 ரூபாவும் பெற்றோல் ஒரு லீட்டரினால் 5.00 ரூபாவும் நட்டம் ஏற்பட்டுள்ளது எனவும் இதனால் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து இம்முறை அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here