இந்தியாவின் பிரதமர் நரேந்திரமோடி மார்ச் மாத அளவில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் ஆதாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் குறித்த ஆதாரங்கள் அடிப்படையில் BIMSTEC உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்கு இந்திய பிரதமர் வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பயணங்கள் மூலமாக இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையிலான உறவை வலுப்படுத்த முயற்சிக்கின்றமைக் குறிப்பிடத்தக்கது.