போதைப்பொருட்கள் மற்றும் தீவிரவாதத்தைக் கண்டுபிடிப்பதற்கு உதவக் கூடிய வாகனங்கள் மற்றும் சில உபகரணங்களை ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.
மேலும் ஜப்பானிய அரசாங்கத்ததால் வழங்கப்படும் இரண்டாம் கட்ட உதவி இதுவென்பதுடன் குறித்த உபகரணங்கள் இன்று ஜப்பானிய தூதுவர் மிஷூகொஷி ஹிதேகி மூலமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
இதேவேளை ஜப்பானால் வழங்கப்பட்ட குறித்த வாகனங்கள் மற்றும் உபகரணங்களின் பெறுமதி சுமார் 700 மில்லியன் ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.