இலங்கையில் அமுல்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் அடையாள அட்டை வேலைத்திட்டத்திற்கு இந்திய நிதியுதவியை பெற்றுக்கொள்வதற்கான இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
உயிரியல் அளவீட்டு தரவுகளின் அடிப்படையில் தனிநபர் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய உபகரணம் மற்றும் இணையவெளியில் தனிநபர்களின் அடையாளத்தை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய இரண்டு கருவிகளையும் ஒன்றினைத்து டிஜிட்டல் மற்றும் பௌதீக சூழலில் தனிநபரை திட்டவட்டமாக அடையாளப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இடம்பெற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, டிஜிட்டல் அடையாள கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு மானியம் வழங்க இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.