Home LOCAL சுங்கம் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்களை விடுவிக்க நடவடிக்கை

சுங்கம் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்களை விடுவிக்க நடவடிக்கை

0
சுங்கம் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்களை விடுவிக்க நடவடிக்கை

சுங்கத் திணைக்களத்தின் வசமுள்ள அத்தியவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,  உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

உணவு உள்ளிட்ட அத்தியவசியப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக, நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையிலான குழுவொன்றை  ஜனாதிபதி நியமித்துள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட சில அத்தியாவசியப் பொருட்களின் கொள்வனவுக்குச் சந்தர்ப்பம் வழங்குமாறும் இதன்போது, குறுகிய எண்ணங்களுடன் அதிகப்படியான பொருட்களை இறக்குமதி செய்வதற்கோ அல்லது பொருட்களைப் பதுக்கி வைப்பதற்கோ இடமளிக்கக் கூடாது என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.

உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைச் சந்தைக்கு விநியோகிப்பது தொடர்பில் முறையான பொறிமுறையொன்று உடனடியாகத் தயாரிக்கப்பட வேண்டுமென்று அறிவுறுத்திய ஜனாதிபதி  இது தொடர்பான ஒழுங்குபடுத்தல்கள் மற்றும் மேற்பார்வைப் பணிகள், புதிய குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here