டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசு

தலைநகர் டெல்லியில் பல மாதங்களாக காற்று மாசு அதிகரிப்பது பெரும் பிரச்சினையாக நிலவுகிறது.

வாகன நெரிசல் காரணமாகவும்  அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர் கழிவுகளை எரிப்பதாலும் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத நிலையை அடைந்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர் காற்று மாசு காரணமாக டெல்லி மக்கள் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலருக்கு சுவாசிப்பதில் சிரமம் கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்று காலை டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு 280 ஆக இருந்ததாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியை ஒட்டியுள்ள நொய்டா, குருகிராம் ஆகிய பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு முறையே 297 மற்றும் 200 என்ற அளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here