கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரையில் வேலைநிறுத்தம் தொடரும் என தாதியர் மற்றும் துணை மருத்துவ தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சம்பள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட 07 கோரிக்கைகளை முன்வைத்து 17 தாதிகள் மற்றும் துணை மருத்துவ தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று காலை முதல் நாடளாவிய ரீதியில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தமது பிரச்சினைகள் தொடர்பில் இன்று சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.