பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவோர் தடுப்பூசி அட்டைகளைக் கொண்டிருத்தல் கட்டாயமாக்குவது குறித்த முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் முழுமையாக தடுப்பூசி பெறப்பட்டவர்கள் மாத்திரமே பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என அதிகார்வபூர்வமாக தெரிவிக்கப்பட்டால் அதனை பின்தொடர்வதே சரி எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது வரையில் அவ்வாறு தெரிவிக்கப்படவில்லை ஆயினும் இது குறித்து சுற்றறிக்கை வெளியிடப்படும் எனவும் பொதுப்போக்குவரத்தில் தடுப்பூசி அட்டைகளைக் கொண்டிருத்தல் தொடர்பில் ஓட்டுனர்கள் மூலம் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.