Home LOCAL சிங்கள, தமிழ் புத்தாண்டில் இலங்கைக்கு கடன் வழங்க முன்வந்துள்ள நாடுகள்

சிங்கள, தமிழ் புத்தாண்டில் இலங்கைக்கு கடன் வழங்க முன்வந்துள்ள நாடுகள்

0

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலங்களில் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இலங்கை இரண்டு கடன் வழிமுறைகள் மீது கவனம் செலுத்தியுள்ளது.

இதற்கமைய இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் தொகையும் அவுஸ்திரேலியாவிடம் இருந்து 200 மில்லியன் டொலர் கடன் வசதியையும் பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிடம் இருந்து பெறும் கடன் தொகையின் மூலம் பருப்பு மற்றும் பார்லி ஆகியவற்றை பெற்றுக் கொள்வதற்கும் இந்தியாவிடம் இருந்து பெறும் கடன் தொகையின் மூலம் கிழங்கு, வெங்காயம், பருப்பு மற்றும் மருந்து வகைகளை இறக்குமதி செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here