Apple நிறுவனம் எதிர்வரும் மாதத்தில் குறைந்த விலையில் புதிய 5G iPhone-ஐ வெளியிட திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Apple நிறுவனம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி குறைந்த விலை கொண்ட 5G iPhone கையடக்கதொலைபேசி iPad ஆகியவற்றை வெளியிடத் திட்டமிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
5G கட்டமைப்புத் திறனுடன், சிறந்த கமெரா, வேகமான ப்ரோசெசர் ஆகியவற்றை அந்த கையடக்கதொலைபேசி கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இது iPhone SE வரிசையின் புதிய புதுப்பிக்கப்பட்ட மொடலாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.
வெளியீடு குறித்துத் திட்டமிடப்பட்டிருந்தாலும், உற்பத்தியில் ஏற்படும் தாமதம், மற்றும் ஏனைய காரணங்களால் அதன் திட்டங்கள் மாறலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.