2 வருடங்களின் பின்னர் எல்லைகளைத் திறக்கும் அவுஸ்திரேலியா

சுமார் இரண்டு வருடங்களாக தனது எல்லைகளை மூடிவைத்திருந்த அவுஸ்திரேலியா, தற்போது முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களை நாட்டுக்குள் அழைக்க அனுமதி வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் புதிய மருத்துவ வழிகாட்டலுக்கு இணங்க சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குள் வருகை தர முடியும் என தெரிவித்துள்ளதாகவும் குறித்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் குறித்த புதிய மருத்துவ வழிகாட்டல்களின் படி அவுஸ்திரேலிய எல்லைகளை அடையவிருப்போர் இரட்டைத் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் எனவும் மோரிசன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அவுஸ்திரேலிய எல்லைகள் மூடப்பட்டமையால் பொருளாதாரப் பின்னடைவை சந்தித்துள்ள குழுக்கள், எல்லைகளை திறக்கவிருப்பது குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here