Home LOCAL நாடளாவிய ரீதியில் சுகாதார சேவை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

நாடளாவிய ரீதியில் சுகாதார சேவை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

0
நாடளாவிய ரீதியில் சுகாதார சேவை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சம்பள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட 07 கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை 7 மணி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தாதியர்கள், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானிகள், மருந்தாளுனர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட பல ஊழியர்கள் ஒன்றினைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், புற்றுநோய், மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள், சிறுநீரக நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் மத்திய இரத்த வங்கி ஆகியவற்றில் வேலைநிறுத்தம் இடம்பெறாது என சுகாதார நிபுணர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here