நாஸ் கலாசார நிலையம் மற்றும் தாருல் குர்ஆன் இணைந்து நடத்திய 74வது தேசிய சுதந்திர தின நிகழ்வு 2022. இந்த நிகழ்வு (04ம்) அன்று நாஸ் கலாசார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பிரதம அதிதிகளாக பல முக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டார்கள். மத்ரஸாவின் ஆலிம்கள்,ஆலிமாக்கள் ,பிரதேச தேவாலய விகாராதிபதி , கிராம உத்தியோகத்தர் ,பொலிஸ் அதிகாரிகள் ,மாணவர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட அதிகாரிகள் கௌரவிக்கபட்டு, அவர்களுக்கு நினைவுப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கிராத் உடன் ஆரம்பிக்கப்பட்ட இவ்விழாவில் சர்வ மத தலைவர்களின் உரைகள் நிகழ்த்தப்பட்டதோடு கிராம உத்தியோகத்தரின் விசேட சொற்பொழிவும் இடம் பெற்றன. இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான , மத்ரஸாவின் நிர்வாக தலைவரினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
JMMC10 Fathima Nusha
