இனிமேல் இவங்கதான் உங்கள் ‘ராணி’ – எலிசபத் ராணி

இங்கிலாந்தில் மக்களாட்சி முறையிலான ஆட்சி காணப்பட்டாலும் ராஜ குடும்பத்தினருக்கான மரியாதை மற்றும் அதிகாரமும் தொடர்ந்து காணப்படுகின்றது.

இங்கிலாந்து ராணியாக எலிசபத் கடந்த 70 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.

அவரது 70வது ஆண்டு ஆட்சியை இங்கிலாந்து பிளாட்டினம் ஆண்டாக கொண்டாடியுள்ளது.

அதனையொட்டி மரங்கள் நடுவதை அதிகரிக்கும்படி இளவரசர் சார்லஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை முன்னிட்டு ராணி எலிசபத் வெளியிட்ட செய்தி குறிப்பில், இளவரசர் சார்லஸ் அரசராக பதவியேற்கும்போது அவரது மனைவி கமிலாவை ‘ராணி’ என அழைக்குமாறு ராணி எலிசபத் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் விரைவில் தனது ராணி பதவியிலிருந்து எலிசபத் ஓய்வு பெறுவார் என பேசப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here