நேற்றைய தினம் நாட்டில் 1,287 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 617,189 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நிலையை கருத்தில் கொண்டு நாட்டை முடக்குவதற்கு அல்லது பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு இதுவரையில் அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதேபோன்று மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.