வருடத்தின் முதலாவது மாதத்தில் மாத்திரம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஜனவரி மாதத்தில் மாத்திரம் சுமார் 7 ஆயிரத்து எழுநூற்று இரண்டு டெங்கு நோய்த் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு
கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் இனங்காணப்பட்ட டெங்கு நோயாளர்களில் 52 சதவீதமானவர்கள் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.