குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப விழாவில் பங்கேற்க பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீனாவிற்கு விஜயம் செய்யவிருப்பதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகரான பீஜிங்கில் நாளை ஆரம்பித்து பெப்ரவரி 20 வரை இடம்பெறவுள்ளது.
இதன் ஆரம்ப விழாவில் பங்கேற்கும் பாக்கிஸ்தான் பிரதமர் பெப்ரவரி 6ம் தேதி வரை சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதுடன் சீன அதிபர் ஜி ஜிங்பிங், பிரதமர் லீ கேகுவாங் உள்ளிட்டோரை சந்தித்து இருதரப்பு உறவு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தவிருப்பதாகவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.