வடகொரியாவின் சர்வாதிகார ஆட்சி குறித்து உலக நாடுகள் பல அதிருப்தியில் உள்ளதுடன் வடகொரியாவின் செயற்பாடுகள் குறித்து பலர் விமர்சித்து வருகின்றனர்.
அந்தவகையில் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆட்சி குறித்த 110 நிமிடங்கள் ஓடும் ஆவணப்படம் ஒன்று அந்நாட்டில் திரையிடப்பட்டுள்ளது.
‘சாதனை ஆண்டு 2021’ என தலைப்பிடப்பட்ட இந்த ஆவணப்படத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வடகொரியா ஏவுகணை தயாரிப்பு, கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்த வடகொரிய கம்யூனிச அரசு மேற்கொண்ட முயற்சி உள்ளிட்ட பல சாதனைகள் திரைமொழியில் ஒன்று சேர்க்கப்பட்டு ஆவணப்படமாக வெளியாகியுள்ளது.
குறித்த படத்தை கிம் ஜாங் ரசித்து பார்த்து மகிழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை வடகொரிய மக்கள் பஞ்சத்தால் வாடும் நிலையில் குறித்த ஆவணப்படம் மற்றும் கிம்மின் செயற்பாடுகள் இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.