தற்போது அடையாளம் காணப்பட்டு வரும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கக் கூடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த இரு வாரங்களின் நடத்தைகளின் பிரதிப்பலிப்பாகவே தற்போது அடையாளம் காணப்படும் கொவிட் தொற்றுக்கள் காணப்படவதாகவும் வரும் காலங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.