Home LOCAL இன்று நள்ளிரவு முதல் உயர்தர கல்வி வகுப்புகளுக்கு தடை

இன்று நள்ளிரவு முதல் உயர்தர கல்வி வகுப்புகளுக்கு தடை

0

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் இன்று நள்ளிரவு 12.00 மணிமுதல் உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரை இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் மேலதிக வகுப்புகள் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இம்முறை உயர்தர பரீட்சைக்கு 345,242 மாணவர்கள் 2,438 பரீட்சை நிலையங்களில் தோற்றவுள்ளார்கள்.

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here