Home LOCAL பெப்ரவரி 4 முதல் பாடசாலைகள் மூடப்படும்

பெப்ரவரி 4 முதல் பாடசாலைகள் மூடப்படும்

0

க.பொ.த உயர்தர பரீட்சை காலத்தில் ஆரம்ப பிரிவு தவிர்ந்த ஏனைய அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் எல்.கே எகொடவெல கையொப்பமிட்ட கடிதமொன்று பணிப்பாளர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை ஆரம்ப பிரிவு தவிர்ந்த ஏனைய அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏதேனும் பாடசாலை உயர்தர பரீட்சைக்கு தடையாக இருப்பின் அவ்வாறான பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here