ரஷ்யா – அமெரிக்கா இடையில் மோதல்

ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தற்போது மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் எல்லைக்கு அருகில் ரஷ்ய இராணுவம் நிலைக்கொண்டுள்ளதால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து கலந்துரையாடுவதற்கு அமெரிக்காவின் வேண்டுகோலுக்கு அமைய ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்பட்டது.

இந்த சந்திப்பின் போது இருதரப்பு தூதுவர்களும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி பேசிக்கொண்டதாக கூறப்படுகின்றது.

ரஷ்ய இராணுவத்தின் அணிதிரட்டல் சமீபத்திய வரலாற்றில் ஐரோப்பாவில் இதுவரை பதிவு செய்யப்படாத மிகப்பெரிய இராணுவ திரட்டல் என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ரஷ்யாவின் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக் கூடாது என ரஷய தூதுவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது படையெடுத்தால் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்காவும் இங்கிலாந்தும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here