ஜனவரி மாதத்தில் நாட்டின் பணவீக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்தின் பணவீக்கம் 14.2 வீதமாக உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதத்தின் பணவீக்கம் 12.1 வீதமாக காணப்பட்டுள்ளதோடு ஜனவரி மாதத்தில் உணவு மற்றும் உணவு அல்லாத துறைகளின் பணவீக்கம் அதிகரித்துளளது.
ஜனவரி மாதத்தில் அரிசி, பழங்கள், பால்மா மற்றும் கோதுமையின் விலை அதிகரித்தமையே பணவீக்கம் அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.