அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பசுமையான விவசாயத்திற்கு அமைய கந்தக்காடு இராணுவ விவசாய நிலத்தில் காபன் உரத்தை பயன்படுத்தி நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் நெல் அறுவடை செய்யும் நிகழ்வு கடந்த 24 ஆம் திகதி குறிப்பிட்ட அளவிலானோரின் பங்கேற்புடன் நடைப்பெற்றது.
இலங்கை இராணுவத்தின் 03 ஆவது படைப்பிரிவின் விவசாய மற்றும் கால்நடை அணியின் கட்டளையிடும் அதிகாரி லெப்டினன் கர்னல் டி. எல் .சி .என் முத்தந்திரி கேயின் ஆலோசனைக்கு அமைய கந்தக்காடு இராணுவ விவசாய நிலத்தின் 180 ஏக்கர் நிலத்தில் இந்த நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது