உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவினால் நிச்சயமாக ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால் அது இரண்டாம் உலக போருக்கு அடுத்த மிக பெரிய போராக அமையும் எனவும் ரஷ்யா பாரிய விளைவுகளை எதிர்கொள்ளும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் போர் சூழல் ஏற்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை எனவும் அமைதியான சூழலுக்கான முயற்சிகளை மேற்க்கொண்டால் அதனை அமெரிக்கா ஆதரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.