காலி துறைமுகத்தை சுற்றுலா துறைமுகமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் முதலீட்டாளர்களுக்கு அறிவிப்பதற்கு இலங்கை துறைமுக அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளது.
காலி துறைமுகத்திற்கு அருகாமையில் புதிய நீர்நிலை ஒன்றை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 40 ஹெக்டர் நிலப்பரப்பு துறைமுகத்திற்கு சொந்தமாக அமைவதோடு கொழும்பு துறைமுக நகரத்தை போன்று சுற்றுலா துறையுடன் தொடர்புடைய ஹோட்டல்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை நிர்மாணித்து உள்ளுர் முதலீட்டாளர்களால் இந்த பிரதேசம் மீள் அபிவிருத்தி செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.