இந்த பெரும் போகத்தில் நெல் அறுவடைக்கு நியாயமான விலையை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார்.
இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு விவசாயிகளிடம் இருந்து 01 கிலோ நெல்லை 75 ரூபாவிற்கு கொள்வனவு செய்வதற்கு தீர்மானம் செய்யப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தனியார் துறைக்கு ஈடாக அரச நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக இந்த நெல்லை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதிக தொகைக்கு நெல் கொள்வனவு செய்யப்பட்டாலும் சந்தையில் அரிசியின் விலை அதிகரிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 2021/2022 பெரும் போகத்தில் நெல் அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட்டு பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக 29,805 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் ஊடாக ஒரு கிலோ நெல்லுக்கு 25 ரூபா வீதம் இழப்பீட்டு தொகை செலுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.