நாட்டில் தடுப்பூசி செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவுபெறுவதையொட்டி எதிர்வரும் 29ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் சுகாதார அமைச்சில் விசேட வைபவமொன்று நடைபெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த வைபவத்தில் கொவிட் வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ள சுகாதாரத்துறை விசேட நிபுணர்கள், மருத்துவ அதிகாரிகள், சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.