90 நாட்களுக்கு சூழலுக்கு விடுக்கப்பட்டுள்ள அவதான நிலை

பேரு நாட்டின் கடற்பகுதியில் மண்ணெண்ணெய் ஏற்றி சென்ற கப்பலில் இருந்து சுமார் 6000 பரல்கள் கடலில் கலந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் பேருவின் கடற்கரை பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதாக பேருவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பேரு அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 90 நாள் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளனர்.

மண்ணெண்ணெய் கடலில் கலந்துள்ளமையால் தற்போது வரையில் பாரிய அளவிலான கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here