வெள்ளவத்தை. தெஹிவளை, பம்பலபிட்டி , காலி முகத்திடல் உள்ளிட்ட கொழும்பின் கடல் பரப்பில் அண்மைக்காலமாக கரையை அண்மித்து முதலைகளின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை கட்டுப்டுத்த விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய பொல்கொட ஆறு மற்றும் பேர வாவி ஆகியன கடலுடன் சங்கமிக்கும் பகுதிகளை வலைகள் கொண்டு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
கணிசமான முதலைகள் கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் சுற்றி திரிவதாகவும் அவைகள் தொடர்ந்து கடலுக்கு வந்து செல்வதாகவும் குறித்த திணைக்களம் சுட்டிக்கபட்டியுள்ளது.