உக்ரைன் அரசாங்கத்தை வழிநடத்த மாஸ்கோ சார்பு ஆட்சியாளரை நிறுவுவதற்கான சதித்திட்டம் குறித்து பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்காக உக்ரைனின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யுவோன் முராயேவை பயன்படுத்துவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா தனது ஆக்கிரமிப்பு மற்றும் தவறான தகவல் அடிப்படையிலான நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வந்து, இராஜதந்திர போக்கை தொடர வேண்டும் என பிரித்தானிய செயலாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரஷ்யா நூறாயிரக்கணக்கான இராணுவ வீரர்களை உக்ரைன் எல்லைக்கு அருகில் நிறுத்தியுள்ளது இருப்பினும் ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக படையெடுக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.