நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய எரிபொருள் தட்டுப்பாட்டினால் நாட்டில் எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதற்கு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சில ஆலோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.
இதற்கமைய வாரத்திற்கு ஒருநாள் காணொளி தொழில்நுட்பம் மூலம் பாடசாலைகளை நடத்துவதற்கும் வாகன நெரிசலை தவிர்ப்பதற்காக அலுவலகம் ஆரம்பிக்கும் நேரங்களை மாற்றி அமைப்பதற்கும் அமைச்சர் ஆலோசனை முன்வைத்துள்ளார்.
அரச நிறுவனங்களில் கலந்துரையாடல் மற்றும் கூட்டங்களுக்கு வரவழைக்கப்படும் உறுப்பினர்களை மட்டுப்படுத்தல், பிரதேச செயலாளர்களை கொழும்பிற்கு வரவழைப்பதை தவர்த்தல் போன்ற காரணிகளை முன்வைத்துள்ள அமைச்சர் காணொளி தொழில்நுட்பம் ஊடாக கூட்டங்களை நடாத்தும்படி அரச நிறுவனங்களுக்கு அறிவிக்குமாறு அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
அதேபோன்று எரிபொருள் விலை சூத்திரத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு கூறியுள்ள அமைச்சர் கொழும்பிற்கு வரும் வாகனங்களை மட்டுப்படுத்துமாறும் தெரிவித்துள்ளார்.