மிகவும் ஆபத்தான எரிமலை வெடிப்பு மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமிக்கு பின்னர் ஒரு வாரம் கடந்த பின்னர் பசுபிக் தீவின் தலைநகரில் வரையறுக்கப்பட்ட கட்டணம் செலுத்தும் சேவைகள் இன்று திறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குடிநீருக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் ஒரு தேசிய குழு ஏற்கனவே 60,000 லீட்டர் நீரை மக்களுக்கு விநியோகித்துள்ளது எனவும் டோங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு நாளைக்கு 70,000 லீட்டர்கள் கடல் நீரை உப்பு நீக்கி உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று நியுசிலாந்து கடற்படை கப்பலில் வந்துள்ள நிலையில் டோங்கா துறைமுகத்திலிருந்து நீரை எடுக்க தொடங்கியுள்ளது.