சபுகஸ்கந்த அனல்மின் நிலையத்தின் இரண்டு பகுதிகளில் B பகுதி எரிபொருள் இல்லாமையினால் மூடப்பட்டுள்ளது.
A பகுதிக்கும் இன்னும் ஒரு மணித்தியாலத்திற்கு தேவையான எரிபொருளே காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில் அந்த மின் நிலையங்களுக்கு எரிபொருள் எண்ணெய் வழங்குவது தொடர்பில் நம்பிக்கை இல்லை என மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மின் சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.